மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என அழைக்கிறோம். சித்தர் என்றால் உயிர் ரகசியம் அறிந்தவர் என்று பொருள்.
சித்தி என்ற சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என பொருள். ஐம்புலன்களை அடக்கும்சித்திகளில் சிறந்தவை எட்டு. அதை அட்டமா சித்தி என்று கூறுகின்றனர்.
இந்த சித்தியில் புகழ் பெற்றவர் வல்லநாட்டு சுவாமிகள். தன் உடலை தனித்தனியே பிரித்துக் காட்டி அற்புதம் செய்துள்ளார். சிறிய கிராமம் பாறைக்காட்டில் பிறந்த மனிதர், மகானாக மாறி அருட்செயலால் வளர்ந்த ஆன்மிகச் சிந்தனையை வெளிப்படுத்தியதையும், சித்தர் எனப் பறைசாற்றாது சித்தி பெற்றதை வெளிப்படுத்தியதையும் விவரித்துள்ள நுால்.
–
இளங்கோவன்