தெய்வ வழிபாட்டில் பண்பாட்டு ரீதியான தொன்மை தொடர்பை ஆராய்ந்து விளக்கும் நுால். மரபுவழியில் மறைந்திருக்கும் உண்மைகளை எடுத்து இயம்புகிறது. பண்டை இலக்கியம், வாழ்மொழி கதைகள், கிராம கோவில் வழிபாடு, தொல்லியல் ஆதாரங்களின் துணை கொண்டு, தமிழக வரலாற்றை அலசுகிறது. மரபு வழிபாடு, சடங்குகள், விழாக்களின் உட்பொருளை ஆராய்ந்து, அவற்றில் பொதிந்திருந்த சமூக செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
தமிழக கிராம கோவில் விழா நிகழ்வுகளுக்கு பின்னணியில் உள்ள காரணங்களை தேடி தருகிறது. குடும்பங்களில் பெயர் சூட்டல் மற்றும் தெய்வ பெயரில் உள்ள வரலாற்று தொன்மை தகவல்களை விவரிக்கிறது.
‘தாய் தெய்வம்’ என்ற தலைப்பில் துவங்கி, 28 கட்டுரைகள் உள்ளன. தெய்வ வழிபாடுகளின் போது கூறப்படும் கதைகளின் உட்பொருளை அலசி ஆராய்ந்து, தக்க ஆதாரங்களுடன் உண்மை பொருளை முன் வைக்கிறது. தமிழர் வாழிபாட்டின் உட்பொருளை எடுத்துக்கூறும் நுால்.
–
மதி