துன்பங்களுக்கான சாஸ்திர விளக்கம், பரிகார வழிபாட்டு முறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். வாஸ்துபடி வீடு கட்டுதல், வாயிற்படி வைக்கும் லக் ஷ்ணம், வீட்டின் ஒவ்வொரு திசைக்கும் எந்த நிறங்களில் வண்ணங்கள் பூசுவது போன்ற விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
துன்பம் கர்ம வினைகளுக்கு எந்த ரிஷி தீர்வு தருவார் என்பதுடன் சப்தரிஷிகளின் வரலாறும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. திருமண பொருத்தம் எளிதில் பார்ப்பது, ஆண் – பெண் ஜென்ம நட்சத்திரங்களுக்குப் பொருந்தாதவை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
நவ கோள்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் நவகோள் கவசம், ஏழு வகை அம்பாளுக்குரிய ஏழு வகை தீபங்களின் மகிமை, தமிழ் மாதம் மற்றும் கிழமைகளுக்குரிய பலன்களும், பயன் தரும் மந்திரங்களும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்