குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தால் கிடைக்கும் சட்ட ரீதியான தண்டனைகள் பற்றி தெரிவிக்கும் நுால். பொது ஊழியர் கையூட்டு பெறுவதை எந்தச் சட்டம் தண்டிக்கிறது என்பதையும், அதற்கான தண்டனையையும் எளிய முறையில் எடுத்துரைக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம் 109 முதல் 510 வரை அனைத்து பிரிவுகளையும் விளக்குகிறது. சில வழக்குகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறுகிறது. அந்த வழக்கு யார் பெயரால் அனைவராலும் அறியப்படுகிறதோ, அந்தப் பெயர்களையும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளது. பொய் சாட்சி சொல்வோருக்கு வழங்கப்படும் தண்டனையே, பொய்யான ஆவணங்களை உருவாக்குவோருக்கும் வழங்கப்படும் என்ற உண்மையையும் எடுத்துரைக்கிறது.
சாதாரண மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. வழக்கறிஞருக்கும், வழக்குகளில் ஆர்வம் உள்ளோருக்கும் பயன்படும்.
–
முகிலை ராசபாண்டியன்