பழங்கதைகளை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ள நுால். கதைகள் வாயிலாக உணர்த்தப்படும் அறிவுரைகளை முன்பகுதியிலேயே பட்டியலிட்டு காட்டியுள்ளது புதிய முயற்சி. முதலில் வரும் ‘தனிமையில் கூறிய கதைகள்’ பகுதியில் ஒரு கதைக்குள் மற்றொரு கதை வரும்படி தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. பார்வதிக்கு சிவன் கூறிய கதையாகவும் கூறப்பட்டு உள்ளது.
குடும்ப கதைகளை உள்ளடக்கிய அடுத்த பகுதியில் ஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு, ஆசையால் ஏற்பட்ட அவமானம், உயிருக்கு உயிரான நண்பன் போன்ற கருத்துள்ள கதைகள் உள்ளன.
மூன்றாம் பகுதியில் உதயணன் கதைகளும், நான்காம் பகுதியில் கலிங்கசேனையின் காதல் கதைகளும் கூறப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் பல்வேறு கருத்துக்களை விளக்கும் 25 கதைகள் உள்ளன. கதைகள் குழப்பமின்றி தெளிவாக அமைந்துள்ளன. கதை விரும்பிகளுக்கு விருப்பமாக அமையும் நுால்.
–
முகில் குமரன்