திருப்புகழில் தேர்ந்தெடுத்த 45 பாடல்களுக்கு விளக்கம் தரும் நுால். சிறுவாபுரி முருகனைப் பற்றிய திருப்புகழ் மற்றும் அருணகிரிநாதர் வரலாறும், குறிப்பும் விளக்கப்பட்டுள்ளது. வினை தீர்க்கும் ஐந்துகரத்து ஆனைமுகப் பெருமானை அன்போடு வேண்டுகிறார். 28 தலைப்புகள் முருகனை வேண்டிப் பெறும் வரம் கூறப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள முருகனின் ஆறுமுகங்கள் செய்யும் ஆறு பணிகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. திருமணம் நடைபெற, நினைத்தது நிறைவேற, வறுமை அகன்று வாழ, நோய்கள் நீங்க, காலன் அணுகாமல் இருப்பதற்கு போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள கதிர்காமத்து முருகன் மீது கனிவோடு பாமாலை சூடப்பட்டுள்ளது. பக்தி நெறி புகட்டும் நுால்.
–
புலவர் இரா.நாராயணன்