கலால் மற்றும் சுங்கத்துறை புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கற்பனை கலந்து படைக்கப்பட்டுள்ள சுவாரசியம் தரும் நாவல் நுால். பொருட்களை கடத்தி வந்து பிடிபட்டு, கைதியாக உள்ளவர்களிடம் நடத்திய நேர்காணல் தகவல்களை உள்ளடக்கி வாசிக்க விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
துறைமுகம், விமான நிலையம் மற்றும் கடல் மார்க்கமாக நடந்து வரும் கடத்தல் நிகழ்வுகளை சுவைபட சித்தரிக்கிறது. அவற்றை தடுக்க, புலனாய்வு பிரிவு அதிகாரிகள் படும் சிரமங்கள், நடவடிக்கைகள் திருப்பங்கள் ஏற்படும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
நாட்டுக்கு கடமை உணர்வுடன் பணியாற்றுவதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நடந்த சம்பவங்களை அனுபவங்களின் துணை கொண்டு கற்பனையான பாத்திரங்கள் வழியாக அதிரடி திருப்பங்களுடன் நாவல் வடிவில் பதிவு செய்துள்ளது. கடத்தலை தடுக்கும் அதிகாரிகளின் பணியை அழகுற எடுத்துச் சொல்லும் நுால்.
–
மலர்