தமிழரின் பண்டைய வீர விளையாட்டான சிலம்பாட்டம் போர்க்கலையை விவரிக்கும் நுால். வரலாற்று அடிப்படையில் சிலம்பாட்டத்தை முதற்பகுதியில் உணர்த்தி, இரண்டாம் பகுதியில் பயிற்சி முறைகளை விவரித்துள்ளார்.
சிலம்பம் ஆடும்போது ஒருவர் நிற்கவேண்டிய நிலை, கம்பை சுழற்றும் முறை, காலடிகளை எடுத்துவைக்கும் நிலை, எதிராளியைத் தாக்குதல் பற்றி விரிவாகவும், படிப்போர் நன்கு விளங்கிக்கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கிறது.
செயல்முறைப் படங்களோடும் எழுதியிருப்பது சிறப்பு. அகத்தியர் கம்பு சூத்திரம் என்ற நுாலை அரிதின் முயன்று பதிவு செய்திருக்கிறது. பேரார்வமும், தேடல் முயற்சியும் போற்றும்படி தகவல்களாக உள்ளன. சிலம்பப்போட்டிகள் குறித்தும் தகவல் தரப்பட்டுள்ளது. சிலம்பு என்னும் தற்காப்புக் கலையை அறிந்துகொள்ள உதவும் நுால்.
– ராம.குருநாதன்