பகவான் ரமணர் காலத்தில் வாழ்ந்த மகான் சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை உரைக்கும் நுால். காஞ்சிபுரத்தில் அவதரித்து, சன்னியாசம் ஏற்று, திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அவரது உள்ளுணர்வோடு ஐக்கியப்படும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
சிறு வயதிலே அறிஞர் சபையில் வேதம், உபநிஷதம், காவியங்களைப் பற்றி சேஷாத்ரி பேசியதை பற்றி பிரமிப்புடன் எழுதப்பட்டுள்ளது. ஞானம், அனுபவத்தால் கவிதைகள் புனைந்தது, வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் புகழ் பக்தி பாடல்கள் இயற்றியது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அஷ்டமாசித்தி கைவரப்பெற்று அதிசயம் நிகழ்த்தியதும் பதிவிடப்பட்டுள்ளது. அருளாளர்கள் முயற்சியால் ஆசிரமம் அமைத்து பூஜை, ஹோமம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்று வருவதை தெரிவிக்கிறது. மகான்களின் உன்னத வாழ்க்கையை இக்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்