முத்தாய்ப்பு ஏதுமின்றி நேரடியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாதாரணமான தலைப்பில் மனதில் பதியும் வண்ணம் கவிதை போல் உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை என்ற தலைப்பில் துவங்கி, 365 என நுாறு கதைகளுடன் முடிகிறது.
ஒவ்வொன்றும், ஒரு பொருள் பற்றி பேசுவது போல் தோன்றுகின்றன; ஆனால், பல நிலையில் கற்பனை சார்ந்து விரிகின்றன. மிக சாதாரண மொழி நடை, படிப்பவருக்கு எளிதில் புரியும். மடியில் சாய்த்து இருளை விலக்கி, நட்சத்திரத்தை காட்டுவது போல் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.