பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் உடல்நலத்தை எப்படிப் பாதுகாப்பது என்று ஆலோசனை கூறியுள்ள நுால். காவல் துறை கைது செய்தால் என்ன செய்யவேண்டும் எனப் பல வழிமுறைகளைக் கூறியுள்ளது.
பெண்கள் நல்ல நுால்களைப் படிக்கலாம்; ஓட்டுனராகப் பயிற்சி பெறலாம்; கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம், நாளிதழ்கள், வார, மாத இதழ்களைப் படிக்கலாம். சேமிப்பு முக்கியம். சொந்த வீடு கட்டுங்கள் என அறிவுரைகளையும், நல்வழிகளையும் காட்டியுள்ளது.
இதுவரை வெளிவராத தலைப்பில், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் நலனை கருத்தில் கொண்டு படைக்கப்பட்டுள்ள நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்