தமிழகத்தில் சைவ சமயத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மடங்களின் வரலாறு மற்றும் செயல்பாட்டை சுருக்கமாக தரும் நுால். திருவாவடுதுறை உட்பட, ஏழு ஆதீனங்கள் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. முதலில் மடங்கள் தோன்றிய விதம் அவற்றின் தொண்டுகள், நடந்த அபூர்வ நிகழ்வுகள் பற்றி, ‘தோரணவாயில்’ என்ற கட்டுரை அறிமுகம் செய்கிறது.
தொடர்ந்து, ஒவ்வொரு சைவ மடங்கள் குறித்த விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. அந்தந்த மடங்களின் தற்போதைய நிலை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சைவ மடங்களை பற்றிய அறிவைத் தரும் நுால்.
–
ஒளி