ஆசியா – ஐரோப்பா கண்டங்களில் விரிந்து பரந்துள்ள ரஷ்ய நாட்டின் வரலாற்றை சுருக்கமாக, தெளிவாக உரைக்கும் நுால். புரட்சிக்கு பிந்தைய லெனின் ஆட்சி காலம் வரையிலான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
வரலாற்றின் துவக்க கால மாஸ்கோ ராஜ்யம், ரோமனாவ் பரம்பரை, முடியரசின் மறைவு, மகா புருஷன் லெனின், குடியரசின் தோற்றம், சமதர்மம் என்றால் என்ன, சமதர்ம கட்சி, சோவியத் அரசியல் அமைப்பு, புதிய நாகரிகம் என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நுால், 1948ல் முதலில் வெளியானது. தொடர்ந்து பல பதிப்புகளை கண்டுள்ளது. இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பின் வரலாற்றை உரிய ஆதாரங்களுடன் தந்துள்ளது. புரிந்து கொள்ளும் வகையில், மிக எளிமையான நடையில் படைக்கப்பட்டுள்ளது. எப்போதும் இந்திய நட்பு நாடாக விளங்கும் ரஷ்யாவை பற்றி புரிந்து கொள்ள உதவும் நுால்.
– மதி