பதிப்பகத் துறைக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆற்றிய பணிகள் பற்றி உரைக்கும் நுால். பழநியப்ப செட்டியார், முல்லை முத்தையா, தமிழ் பண்ணை சின்ன அண்ணாமலை, பாரி செல்லப்பன் பற்றி அவர்களது வழித்தோன்றல்கள் தொகுப்பாசிரியர்களாக இந்த நுாலை தொகுத்துள்ளனர். பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை, செய்திகளை அழகாக தொகுத்து வடிவமைத்து உள்ளனர்.
பழனியப்பா பிரதர்ஸ் கட்டிய மாளிகைக்குப் பெயர் கோனார் மாளிகை. பாரதிதாசனுக்கு வீடு கொடுத்தவர் முல்லை முத்தையா. கல்கி எழுதியதை மேடையில் பேசிய சின்ன அண்ணாமலை என தகவல்கள் உள்ளன. வரும் தலைமுறைக்கு எழுத்து சரித்திரம் சொல்லும் தொகுப்பு நுால்.
–
சீத்தலைச் சாத்தன்