திருவாசகத்தின் சுவை பற்றி பக்தி நெறி, கோட்பாடு, பக்தியின் வெளிப்பாடு, இறைவனின் திருவிளையாடல் என பல கோணங்களில் ஆராய்ந்து சமய நெறி பரப்பும் நுால். பாண்டிய நாட்டு அரிமர்த்த மன்னனின் முதலமைச்சர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டம் பெற்ற வாத ஊரார் வரலாற்றுடன் அவர் பாடிய வரிகளை சுவைபட எடுத்து ஆள்கிறார்.
தாய் பசுவை நாடிச் செல்லும் கன்றைப் போல சிவனின் திருவடியை நாடுங்கள் என்று எளிமையாக சொல்கிறார். திருவாசகத்தின் வழியே தமிழ், அறிவியல், வரலாறை புரிய வைக்கிறது. சிவபுராண பாடல்கள் மற்றும் சேரமான் பெருமாள், நம்பியாண்டார் நம்பி, நக்கீர வேதநாயனார் இயற்றிய நுால்களில் திருவாசகம் எடுத்தாளப்பட்ட சிறப்பை போற்றியுள்ளார். சைவமும் தமிழும் தழைக்க உதவும் நுால்.
–
சீத்தலைச் சாத்தன்