உயர்ந்த வேதமான ஸ்ரீஸுக்கம் பற்றி விளக்கியுள்ள நுால். வேதத்தை பொருள் தெரியாமல் ஓதுபவன், பாரமான கல்லை சுமக்கிறான். இதனால் ஒரு பயனும் இல்லை. பொருள் புரிந்து ஓதுபவருக்கு பாவங்கள் அழிந்து நன்மைகள் கிடைக்கின்றன என பதிவிடப்பட்டுள்ளது.
வேதங்களை பொருள் புரிந்து படிக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் எழுதப்பட்டு உள்ளது. லக்ஷ்மி தந்திரத்திலும், ஸ்ரீஸுத்தத்திலும் உள்ள நாமாவளி, ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம், விஷ்ணு புராணத்தில் தேவேந்திரன் அருளிய லக்ஷ்மி ஸ்துதி, ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிய ஸ்ரீஸ்துதி ஆகியன பொருள் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
மஹாலக்ஷ்மியின் திருமேனி அழகு வருணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்தோத்திரத்திற்கும் பொருளுரையோடு விளக்க உரையும் மேற்கோள்களுடன் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. சில முக்கிய குறிப்புகளும் பதிவிடப்பட்டுள்ள நுால்.
–
புலவர் சு.மதியழகன்