பக்கத்து வீடு மற்றும் பூர்வீக பாகப்பிரிவினைகளில் ஏற்படும் பாதைப் பிரச்னையை தீர்க்கும் விதமான விபரங்களை கொண்டுள்ள நுால். சிறிய குறுந்தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.
பாதையில்லாத நில உரிமையாளர்களுக்கு தக்க ஆலோசனை கூறுகிறது. பொதுப் பாதை, வழிப் பாதை என வித்தியாசங்களை விரித்துக் காட்டுகிறது. அரசு நிலத்தில் பாதை உரிமை கோர முடியுமா போன்ற கேள்விகளை முன் வைத்து, பதில்களையும், வழிமுறைகளையும் தெரிவிக்கிறது.
தனியார் பட்டா நிலத்தில் பொதுமக்கள் பாதை கோர முடியுமா போன்ற பிரச்னைகளில் உள்ள சட்ட ரீதியாக விதிகளை பகிர்கிறது. பாதை தொடர்பாக உள்ள உரிமைகளை எடுத்துக் கூறும் நுால்.
– ஒளி