உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை போன்ற குணங்களை மையப்படுத்தி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தான் மட்டும் உயராமல், சுற்றி உள்ளவர்களும் உயர வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
கல்வி தான் வானுயரச் செய்யும். பிரச்னைகளை கண்டு நொடிவதும், மேடு பள்ளங்களில் தேங்குவதும் முன்னேற்றத்தின் தடைக்கற்களாக மாறும் என எதார்த்தங்களை சொல்கிறது. அடுத்தவரின் கருத்துக்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சுயநம்பிக்கை, மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஆயுத போர்வாள் என்கிறது.
தயக்கமின்றி முயற்சி செய்தால், தடைகள் கூட தலை வணங்கும். எப்போதும், இலக்கை நோக்கிய பயணம் கூர்மையாக்கும். தனக்கான அடையாளங்களை உலகம் அறிய வேண்டும் என்றால், விமர்சனங்களை புறந்தள்ள வேண்டும். சிரிப்பு, விரக்தியை விரட்டும் அருமருந்து; தடுமாறும் எண்ணத்தை தடுத்து நிறுத்தி வீறுநடை போடச் சொல்கிறது. தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை நுால்.
–
டி.எஸ்.ராயன்