சினிமாவாகி புகழ் பெற்ற திரைக்கதை வடிவம் புத்தகமாகியுள்ளது. திரைப்படத்தில் பணியாற்றியவர்களின் பிரத்யேக பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன. கதை மூலத்துடன் தொடர்புடையவர் கருத்தும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இருளர் இன மக்கள் வாழ்வு சூழலை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை கொண்டுள்ளது. வறுமை, வாய்ப்பின்மை, அதிகார துஷ்பிரயோக பாதிப்பு போன்ற சம்பவங்களின் பின்னலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பின் தங்கிய சமூக மக்களின் குரலாய் உள்ளது. உயிரோட்டத்துடன் கூடிய கதை அமைப்பை கொண்டுள்ளது. ஏழை மக்களின் துயரத்தை, போராட்டத்தை மையமாக கொண்டுள்ள நுால்.
–
ராம்