மகான் சாயிபாபா குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சீரடி சாய்பாபா சிறுவனாக, 12 ஆண்டுகள் குருவிற்கு பணிவிடை செய்து தவம் இருந்தது பற்றி விளக்கமாக உள்ளது. ஆழ்நிலை தியானம் பற்றிய அறிவு, பூர்ணமாக நிறைந்து, லவுகீக ஆசைகள் ஏதுமின்றி வாழ்ந்தது மற்றும் அறிவின் புகலிடமாக விளங்கியதை குறிப்பிட்டுள்ளது.
உறுதியாக நம்பினால் வேண்டிய உதவிகள் கிடைக்கும் எனவும், பொறுமையுடன் காத்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாய்பாபா ஆசீர்வதித்த உதியின் மகிமை பற்றியும் விளக்குகிறது. குழந்தைக்குப் பேசும் ஆற்றலை வழங்கியது; தம்பதிக்கு புத்திர பாக்கியம் தந்தது; தொலைந்த பணத்தை மீட்டுத் தந்த நிகழ்வு மற்றும் பல அதிசயங்கள் பற்றி அறிய தரும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்