முதலாம் ஆதித்த சோழன் காலத்திய திருப்பழனம் கோவில் கல்வெட்டை சான்றாக வைத்து புனையப்பட்ட நாவல். சாமானியர் காதலில் துவங்கி வரலாற்று புதினமாக நிறைவடைகிறது. முதலாம் ஆதித்த சோழனால் எழுப்பப்பட்ட திருப்பழனம் கோவிலில் ஆபத்சகாயராக சிவபெருமான் கம்பீரமாக வீற்றிருக்கிறார். திருமுறை ஓதுதற்கு பார்வையற்ற பன்னிரு மகளிர் நியமிக்கப் பட்டிருந்தனர் போன்ற செய்திகளை சொல்கிறது.
சோழ அரசர்கள் சைவம், தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பராந்தக சோழனின் போர்த்திறம் பதிவிடப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் வியப்பு தருகின்றன.
–
புலவர் சு.மதியழகன்