உள்ளத்து மகிழ்ச்சியை வெளிக்கொண்டு வருவதே வாழ்க்கை என்பதை பாடல்களில் வெளிப்படுத்தும் நுால். மாணவர்களின் திறனை வளர்க்கும் வண்ணம் பல விடுகதைகள் அமைந்து உள்ளன. எளிதில் கற்று மகிழ, ‘திருக்குறளைப் படிப்போம் சிறப்பாக இருப்போம்’ என்ற தலைப்பில் பயனுள்ள கருத்துகளைத் தருகிறது.
நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும், பெரியோரை நேசிக்க வேண்டும் போன்ற தலைப்புகள் நல்ல சமூகம் வளர துணை செய்யும். கூடி வாழ்தால், உடற்பயிற்சி, சேமிப்பு போன்ற கருத்துகள் நற்பண்புகள் வளர்க்கும் சிந்தனையைத் தருகிறது. அற்புத கருத்து கொண்ட பாடல் தொகுப்பு நுால்.
–
புலவர் இரா.நாராயணன்