மன அழுத்ததை தடுப்பதற்கான வழிமுறைகளை தரும் நுால். மன அழுத்தத்தால் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய், ரத்தக்குழாய் பிரச்னைகள் உண்டாகி ஆயுளைக் குறைக்கும் என்ற பாதக விளைவுகளை முன்வைக்கிறது.
கடுமையான நோய்களுக்கு உளவியல் காரணிகளை ஆராய்ந்து, மன வசிய மருத்துவ முறைகளை விளக்குகிறது. பெருகும் மன அழுத்தம் அமைதியை குலைத்து விடுவதைக் கூறி எச்சரிக்கிறது. கோபம், பொறாமை, வெறுப்பு, குழப்பம், சந்தேகத்தால் வரும் மன அழுத்தங்களை அன்பு, தன்னம்பிக்கையால் விலக்க முடியும் என முன்வைக்கிறது. அதை களைந்து மனநிறைவோடு வாழ வழிகாட்டுகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு