கவிமணி என புகழ்பெற்ற தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ள கவிதைகளின் மொத்த தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இதழ்களிலும், தனி நுால் தொகுப்புகளிலும், கையெழுத்து பிரதியாக இருந்தவற்றையும் ஆய்வு செய்து தொகுக்கப்பட்டுள்ளது.
மலரும் மாலையும், இலக்கியம், குழந்தைப் பாடல்கள், கதை பாட்டுக்கள், உள்ளமும் உணர்வும், சமூகம், தேசியம், வாழ்த்து, இரங்கல் பாடல்கள், பிற பாடல், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமார்கய்யாம் பாடல்கள், கீர்த்தனைகள் என குறுந்தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.
பாட பேதங்கள் அடிக்குறிப்பாக தரப்பட்டு உள்ளன. ‘தினமலர்’ நாளிதழ் துவங்கிய போது எழுதிய வாழ்த்துப்பாவும் இடம் பெற்றுள்ளது. அரிய பெட்டகமாக விளங்கும் நுால்.
– ஒளி