கூட்டுப்பட்டா பற்றி விரிவான தகவல்களை தரும் நுால். தந்தைக்கு நான்கு வாரிசுகள் என்றால், அவர் இறந்த பின் கூட்டுப்பட்டாவாக மாறிவிடும். தனித்தனி பத்திரங்கள் இல்லாத நிலையில் தனிப்பட்டா வாங்குவதில் ஏற்படும் சிக்கல், கூட்டுப்பட்டா சட்டம், உட்பிரிவு கட்டணம் பற்றி தெரிவிக்கிறது.
கூட்டுச் சொத்து, கூட்டுப்பட்டா உள்ள வேறுபாடு, கூட்டுப்பட்டா நிலத்தில் எல்லை பிரச்னையை தீர்ப்பது, பாகப் பத்திரம் எழுதுவது என தகவல்களை கொண்டுள்ளது. கூட்டுப்பட்டா நிலத்தில் வண்டிப் பாதை பிரச்னை, இந்த வகை நிலத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை, ஏமாற்று போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்வோருக்கு வேண்டிய நுால்.
–
புலவர் சு.மதியழகன்