வாழ்க்கைப் பயணத்தை பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். கைநாட்டு கவிதை, முதல் தலைமுறை கல்வி அறிவு சவால்களை விவரிக்கிறது. கல்லறை சென்ற உடலில், உயிர் வந்தால் எப்படி துடிக்கும் என படபடக்க வைக்கிறது.
தந்தையின் அறிவுரையை காது கொடுத்து கேட்கச் சொல்கிறது. முதுமைக்கு முன் முழுமை பெற வேண்டும் என, வாழ்வியலின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. உள்ளங்கையில் உருளும் உலகம், கையடக்க அலைபேசி வழியாக வருவதை விவரிக்கிறது. பிரிதலின் வலியை உணர்த்துகிறது. புத்தகம் மனிதனை என்ன செய்யும் என தேடச் சொல்கிறது. பாமர மக்கள் வாழ்க்கை மொழியில் எழுதப்பட்ட கவிதை நுால்.
–
டி.எஸ்.ராயன்