பாரதியின் இசைத் திறனை, பாவேந்தரின் மதிப்பீடுகளால் அளந்து காட்டும் அருமை நுால். சிந்துப்பா குறித்த செய்திகள், பாரதியின் முன்னோடிகள், இசைத் தமிழ் விளக்கங்களை ஆழமாக சான்றுகளோடு தருகிறது.
பாரதியின் இசை வாழ்க்கை, பாட்டுத் திறம், இசையமைக்கும் ஆற்றல், சிந்துப் பாடல்கள், சிந்துக்குத் தந்தை உட்பட 12 தலைப்புகள் பரவசம் தருகின்றன. சிந்து பாடல்களுக்கு தானே ராகம், தாளம், பல்லவி, அநுபல்லவி, சரணம் தந்ததை விளக்குகிறது.
கும்மி, நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, ஆனந்தக் களிப்பு, கிளிக் கண்ணி வகைகளில் பாரதி பாடியதை குறிப்பிடுகிறது. பாரதியின் திறனை பாங்குடன் எடுத்துக்காட்டும் நுால்.
–
முனைவர் மா.கி.ரமணன்