மாணவர்களை சிறந்த குடிமக்களாக்குவதே ஆசிரியரின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தும் நுால். கற்பித்தலில் நுட்பங்களுக்கு விளக்கம் தருகிறது. தன்னம்பிக்கையூட்டி நல்லிணக்கத்தோடு வாழ்வதையும் கற்பிக்க வேண்டும் என அனுபவங்களிலிருந்து எடுத்துக் காட்டுகிறது. மாணவர் எதிர்பார்ப்பை தெரிந்து கொள்வதே முதல் கட்டம் என்கிறது.
தியாக உள்ளமும், சேவை மனப்பான்மையும் ஆசிரியருக்கு வேண்டும் என வலியுறுததுகிறது. சகிப்பு, பொறுமை, பொறுப்புணர்வு மூலம் மாற்றம் ஏற்படுத்திய நிகழ்வுகளை தொகுத்து தருகிறது. குடும்பச்சூழல் தெரிந்து வழிகாட்டுவதே சாதனை என கூறப்பட்டுள்ளது. இளைய தலைமுறை ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு