காதல் தொடர்பான மனநிலை மற்றும் ஏக்கத்தை உளவியல் சார்ந்து வெளிப்படுத்தும் நுால். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில் வாழாத பெண்ணின் மன இயல்பும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
மடலேறுதல், காதல் நிறைவேறாத நிலையின் உச்சமாக சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மடல் என்பது பனை ஓலையால் செய்த குதிரை வடிவம். அதில் விரும்பும் பெண்ணின் உருவம் வரைந்து தாங்கியபடி இருப்பதை குறிக்கும்.
இது காதலுக்கு இழுக்கு என கருதப்பட்டுள்ளது. பொருள் தேட பிரியும் தலைவன், தலைவி மனநிலையை தெளிவுபடுத்துகிறது. சங்க இலக்கியத்தில் ஆய்வு நிகழ்த்துவோருக்கு கருவூலமாக அமைந்த நுால்.
–
முகிலை ராசபாண்டியன்