விடுதலை போராட்டத்தின் போது காந்திஜி நடத்திய ஹரிஜன் இதழின் தமிழாக்க தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சுதந்திர நிகழ்வுகளை ஆவணமாக பதிவு செய்துள்ளது. மத ஒற்றுமை, இயற்கை மருத்துவம், அகிம்சை, மதுவிலக்கை பரப்பும் வகையில் பேசுகிறது. கல்வி, நீர் மேலாண்மை, சிறை சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு தகவல்களை கொண்டுள்ளது.
காந்திஜி எண்ணத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக திகழ்ந்தது. இதில், 1946 ஏப்ரல் துவங்கி, 1947 ஏப்ரல் வரையிலான இதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக தத்துவார்த்த விசாரணைகளும் இடம் பெற்றுள்ளன. காந்திஜியின் இறுதிகால சிந்தனையின் ஆவண நுால்.
–
ஒளி