பண்டை காலத்தில் தமிழக நிலப்பரப்பில் நிகழ்ந்த போர்கள் பற்றிய விபரங்களை தரும் நுால். தலையாலங்கானத்தில் துவங்கி, வீர சிவாஜியின் எழுச்சி வரை பேசுகிறது.
தமிழ் நிலப்பரப்பில் பண்டை காலத்தில் ஏற்பட்டிருந்த போர்க்களங்கள் குறித்து விரிவான செய்திகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு போர் பற்றியும் இலக்கிய ஆவண ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. படையின் போக்கு, மன்னர்களின் நிலை, திறன், பின்னடைவு, யுத்திகள், போரின் விளைவுகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
போரில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் பண்டைய போர்க்களங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள தனித்துவமான நுால்.
– ஒளி