பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், தந்தை வழி கவிஞர். அவரது இயற்பெயர் கோபதி. கோபதியின் மகன் தந்தை, தாத்தா பற்றி எழுதிய, 50 கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
‘திட்டமிட்ட நேர்த்தியான உழைப்பு வெற்றி தரும்’ என அறிவுரைக்கிறது. கடன் கொடுப்பதை விட இருப்பதை தந்து விட்டு, மறந்து விடுவது நல்லது என உபதேசிக்கிறது.
பாரதிதாசனின் தந்தை கனகசபை, செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவால் வறுமை வந்த போதும், செம்மையில் மாற்றம் இல்லை. அதனால் தான், வறுமை வந்த போதும் இலக்கிய குயில் இதழ் வெளியிடுவதை பாரதிதாசன் நிறுத்தவில்லை போன்ற தகவல்களை தரும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்