சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இருந்த ஜாதிக் கொடுமையின் அடிப்படையில் சமூக அவலத்தை ஓசை நயமிக்க காவியமாக்கியுள்ள நுால். சமூக வளர்ச்சி சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது.
ஒரு படைப்பு, ‘போரோடும் எரிகின்ற வைக்கோலின் புகை போல் புதுமுகில்கள் கூடாரம் அடித்து விடும் வானில்’ என்று மழைக்கால வர்ணனையில் கதை துவங்குகிறது. முழுதும் சோக கீதம் தான்.
மற்றொரு இடத்தில், ‘ஒடிபட்ட கிளை என ஒரு தழலில் பட்ட இளம் தளிரென பிடிபட்ட பெரும் பாம்பின் வாயிலே தவளை’ என உவமை, ஓசை நயத்துடன் மிளிர்கிறது. ஏழைகளை ஆப்ரிக்காவுக்கு அனுப்பி அவதிப்படுத்திய வேதனை பாடுபொருள் ஆகியுள்ளது. சத்தான பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்