பாரதியின் பாஞ்சாலி சபதம் வழியில் நிழலில், மகாபாரத கதையை விரிவாக, விவாதமாக, சுவையாக தரும் நுால். சந்தேகங்கள், குற்றச்சாட்டுகளுக்கு பாட பேதங்களை காட்டி ஆதாரங்களுடன் தீர்வு சொல்கிறது.
மூலக்கதை பாத்திரப் பெயர்கள் பாலிகா என்பது வாலிகன் என்றும், ஏகலவ்யன் என்பது ஏகலைவன் என்றும் தமிழில் வழங்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கதையின் நடுவே ராமாயணத்தை ஒப்பிட்டுச் சொல்வது, ‘சக்கரைப் பந்தலில் தேன்மழை பெய்வது’ போல் உள்ளது.
பழைய பாரத வசனங்களும், புதிய கேள்விகளும், கம்பன், வில்லி, பாரதி பாடல்களும் ஆதார அணிவகுப்புடன் அலங்காரமாக நகர்கிறது.
யாரும் சொல்லாத வினா – விடை, விவாத முறையில் மகாபாரதத்தை சொல்லும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்