புகழ்பெற்ற நாடக நடிகர் டி.கே.சண்முகத்தின் வாழ்க்கை வரலாற்று நுால். அனுபவங்கள் ஒவ்வொன்றும் காட்சியாக விரிகின்றன.
அவ்வை வேடம் புனைந்து நடித்ததால் அப்பெயர் அவரோடு ஒட்டிக்கொண்டதை குறிப்பிட்டு, பல ஊர்களில் நடத்திய நாடக அனுபவங்கள் சுவைபட சொல்லப்பட்டுள்ளன.
‘சத்தியவான் சாவித்திரி’ நாடகக் காட்சி ஒன்றில் எமன் வேடமிட்டவரைப் பார்த்து பயந்து நடுங்கியது, பவளக்கொடி நாடகக் காட்சியில் நடிக்காமல் உறங்கியது போன்ற பசுமை நினைவுகள் விரிகின்றன.
சிவகங்கையில் நாடகம் பார்க்க வந்தவர் குடும்பத்தில், 13 பேரை மனைவியர் என்று அறிமுகப்படுத்திய நிகழ்வு போன்று சுவாரசியம் தருகிறது. தமிழக நாடக வரலாற்றின் முக்கிய ஆவணம். நாவல் படிப்பது போன்ற உணர்வை தருகிறது.
– ராம.குருநாதன்