உலகின் இறப்பு குறித்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஜப்பானிய இறப்பு குறித்த நம்பிக்கை, போர் வீரர் இறப்பு, புத்த துறவியர் இறப்பு, காதலர்களின் இறுதி கவிதை, கொரியாவின் இறப்பு என உலகளாவிய கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கியத்தில் இறப்பு சிந்தனையை பேசுகிறது. ‘பயனில்லாத உடலில் பாசி படிந்து விட்டது’என துவங்கும் ஜப்பானிய கவிதை, வீரர்களின் துயரத்தை நினைவூட்டுகிறது. ‘நான் என்னவாக இருப்பேன்’ என்ற கவிதை, கொரியா சிறைவாசி குமுறலை பேசுகிறது. ‘போதி மரம் இருந்ததில்லை’ என்ற கவிதை, சீனர்களின் இறுதி மூச்சை சொல்கிறது.
தமிழ் இலக்கியத்தில் இறப்பை கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்