நிமிர்ந்து உட்காரச் செய்யும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
ஐந்து பிரச்னைகளை உள்ளடக்கி, வானம்தானே தொடுவதற்கென்ன, இழுகென்பதெல்லாம் ஏணிப்படிகளடி, வைய்யமெல்லாம் நின்னதடி, யுத்தமெல்லாம் ஜெயித்து விடலாம், வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற தலைப்புகளில் பெண்கள் பேசுகின்றனர்.
அது, பிரச்னைகளை கண்டு துவண்டு விடாதே என்ற மந்திர வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. தந்தை, மகளுக்கு அறிவுரை கூறுவது போல், எழுத்தாளரே சமூகக் கருத்தை, சிந்தனையை முன் வைக்கிறார். இது, முன்னேறும் முனைப்புள்ள அனைவருக்கும் பொருந்தும். தோல்வி வந்தாலும் தொடர்ந்து போராடு என்ற பாதையை காட்டும் தொகுப்பு நுால்.
– மதி