சமூக பார்வையில் படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்துக்கு சாராம்சமாக எழுதப்பட்டுள்ளது.
தத்தெடுத்தால் அனாதை குறைவர் என ஏற்றத்தாழ்வுகளை கூறுகிறது. நிதி இருந்தால் தான், நீதியே தலைநிமிரும் என, நாட்டின் சீர்கேட்டை சாடுகிறது. படித்தவர்கள் தெய்வங்களிடம் வரம் கேட்பது, வேலையின்மையை சுட்டிக்காட்டுகிறது.
நாடோடி பயணத்தை, அதன் திசை வழியில் அழைத்துச் செல்கிறது. தேர்தல் போலி வாக்குறுதிகளை தோலுரிக்கிறது. சுவாமியை விட பசித்த உயிர்களுக்கு உணவு வழங்குவோம் என, மூடநம்பிக்கைக்கு சாட்டையடி கொடுக்கிறது. ஒவ்வொரு கவிதைக்கு ஏற்ப புகைப்படம் சேர்த்திருப்பது சுவாரசியம் ஏற்படுத்துகிறது.
– டி.எஸ்.ராயன்