மரபுத் தொடர்களை கொண்டு எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும், இரண்டு வரிகளில் சுருக்கமாய் உள்ளது.
அரைத்த மாவையே அரைத்தால் வெற்றி வியாபாரிக்கு என, ரத்தினம் சுருக்கமாக பேச வேண்டும் என உணர்த்துகிறது. தீக்குச்சியின் சண்டையால் கொழுந்துவிட்டு எரியும் தீப்பெட்டி தொழிற்சாலை கொடூரத்தை பேசுகிறது.
வேலையில்லாதவருக்கு பட்டம் கிடைத்து என்ன பயன் என கேட்கிறது. விருது பெறும் நடிகர்களின் இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டுகிறது. புளி வியாபாரிக்கு புளிப்பு தட்டினால், வாழ்க்கை இறங்கும் என கூறுகிறது. இரும்பு வியாபாரியின் புத்திசாலித்தனத்தை கூறுகிறது. கவிதை எழுத துடிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்