மூன்றாம் படைவீடு, பழநி கோவில் வழிபாடு, மரபுகள், திருவிழாக்கள், காவடிப் பாடல்கள் பற்றி விவரிக்கும் நுால். ஓலைச் சுவடியிலிருந்து நுாலாக பதிப்பிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் தோளில் காவடி சுமந்து உரக்கப் பாடி வரும் வழிநடை சிந்துப் பாடல்கள் சந்த தாளத்தோடு தரப்பட்டுள்ளன.
பாம்பும் முருகனும் சேர்த்து வழிபடப்படுவது ஏன்? வேல் வழிபாடு, சித்தர் போகர், வைகாபுரி நாடு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
பரவச நிலை, அருள் வாக்கு, குறி சொல்லல், பிரம்பால் அடித்துக் கொள்ளல் போன்ற செயல்கள் உளவியல் முறையில் ஆராயப்பட்டுள்ளன. பழங்கால ஓலைச்சுவடி, நுால் வடிவம் பெற்றுள்ளது.
– முனைவர் மா.கி.ரமணன்