சென்னை நகர பெருவெளியில் புதைந்து கிடக்கும் வரலாற்று தகவல்களை சுவாரசியமாக வெளிப்படுத்தும் நுால். விவரிப்புகளில் நகர வளர்ச்சி மீதுள்ள ஈடுபாடு தெரிகிறது. நிகழ்காலத்தில் பொருத்தி நோக்க ஏதுவாக உள்ளது.
மக்கள் கற்றதையும், பெற்றதையும், இழந்ததையும் ஓவியம், போட்டோ மற்றும் தகவல் வழி காட்சிப் படுத்தியுள்ளது.
சிந்தாதிரிபேட்டை என்ற தறி நெசவு பகுதியின் செயல்பாடு மற்றும் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட மஸ்லின் என்ற துணியின் வரலாற்று செய்திகள் ஆர்வத்தை துண்டுகிறது. தமிழகத்தில் குடியேறிய ஆர்மீனியர் செயல்பாடும், கலாசார பின்னணியுடன் தொகுக்கப்பட்டு உள்ளது.
சென்னை நகரின் வளர்ச்சி நிலையை, அதன் பண்பாட்டு பின்புலத்துடன் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ள நுால்.
– மலர்