சமண சமயக் கொள்கைகள் சார்ந்த புராணச் சம்பவங்களைக் கதைகளாகப் புனைந்து தொகுத்துள்ள நுால். அறங்களைப் பின்பற்றி முக்தி அடையும் வழி முன்வைக்கப்பட்டுள்ளது. சமணர் பின்பற்றும் ஜைன அறங்களைச் சுற்றி கதைகள் பின்னப்பட்டுள்ளன.
நாலடியார், நரிவிருத்தம் போன்ற புத்தக கருத்துக்களை மையமாக்கியுள்ளன.நேர்மை, வாய்மை, அன்பு, கருணை, பரிவு, புலனடக்கம் போன்ற நற்குணங்களை ஏற்று, பேராசை, வஞ்சகம், களவு போன்ற தீய குணங்களைத் தவிர்ப்பதற்கு வழிகாட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு