உண்ணும் உணவு, உடலில் அடிப்படையாக ஏற்படுத்தும் மாற்றம் பற்றி அறிவியல் ரீதியான தகவல்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நுால். தரமற்ற உணவு, உடல்நலத்தை பாதிப்பது குறித்தும் விளக்கியுள்ளது.
உடல் வளர்ச்சியில் உணவின் பங்கை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதற்கான அடிப்படை அறிவியலை எளிய நடையில் தருகிறது. நோய்கள் ஏற்படுவது பற்றியும், நுண்ணுாட்டச் சத்துக்களின் நன்மைகள் குறித்தும் விளக்குகிறது.
உணவின் வகைகள், அதில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்களால் ஏற்படும் நன்மைகள், சத்துக்கள் குறைவதால் உடல் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் என, உடல் நலம் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கிறது. உணவை அறிவியல் பூர்வமாக புரிந்து, நலமாக வாழ உகந்த கருத்துக்களை எடுத்துச் சொல்லும் நுால்.
– ராம்