வடமொழி ராமாயணத்தைத் தழுவி, மாறுபாடுகளோடு தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அமைந்துள்ள நுால்.
தமிழில் ராமாயணத்தை ஆக்கிய கம்பன் தோன்றும் முன்பே, தமிழகத்தில் ராமாயண கதை வழங்கியிருக்கிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் சுட்டப்பட்டுள்ளன. ஆழ்வார்களும் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.
உயிரினும் ஒழுக்கமே சிறந்தது என்பதில் உறுதியாக இருந்த கம்பன், வள்ளுவர் அறத்தையும், குறட்பா கருத்துகளையும் எடுத்தாண்டுள்ளார். தமிழ் மக்கள், ஜாதி, மத, மொழி, வெறுப்பு இன்றி இணைய உயரிய கருத்துகளை தந்துள்ளார். தமிழகத்தின் மீது அளவற்ற அன்புடன் திகழ்ந்த கம்பன் பற்றி விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்