சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்ணின் பாசாங்கால் ஏமாந்து போன கவிஞன், வாழ்க்கையை இழந்து நிற்கும் அவல நிலையை, ‘மறைந்த நட்சத்திரம்’ கதை விவரிக்கிறது. காதல் கண்ணுக்குத் தெரியாத ஒன்று, அது, எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பது அழகான மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் மனம் எந்தச் சூழ்நிலையிலும் கவலைப்படக் கூடாது என்பதற்காக எடுக்கும் முயற்சியை தவறாகப் புரிந்து கொள்வதை, ‘நினைவு முகம்’ கதை உணர்த்துகிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் இயல்பையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் காட்சிகள் வேறுபட்டு இருப்பது போல் மாறுபட்ட கோணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. சிறுகதைகளால் கவரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்