ரஷ்ய இலக்கியங்களில், மனித மனங்களை ஊடுருவி பார்க்க வைக்கும் வித்தியாசமான கதை நுால். ரஷ்யாவில், பொதுவுடமை சமூகம் உருவானதை கொண்டாடுகிறது. மே முதல் நாள் நடக்கும் பீரங்கி முழக்கத்துடன் கதை நகர்கிறது. கப்பல் பணி தளத்தில்நடக்கும், உழைப்பு, சுரண்டல், அதை எதிர்க்கும் தொழிலாளர் ஒன்றுமையை விரிவாக பேசுகிறது.
விவசாயம், விஞ்ஞான அறிவுத் திறன் கொண்ட சமூகம் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக மாறும் என்பதை புரிய வைக்கிறது. கட்டுமான அரங்கில் இருந்து, கப்பல் கடலில் சேரும் அழகை குதுாகலமாக வர்ணிக்கிறது. கப்பல் கட்டுமான தளத்தில், தொழிலாளர்கள் பணியின்போதே, குடும்பமாக ஒன்று சேரும் சூழலை நட்பாக விவரிக்கும் நுால்.
– -டி.எஸ்.ராயன்