புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அண்ணாமலை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை மையமாகக் கொண்ட கதை குருவிப்பட்டி. ஊருக்குள் குரங்குடன் வித்தை காட்ட வந்தவர் பட்ட பாட்டை விளக்குகிறது. துறவி ஆனவன், துறவிக்குரிய பக்தி ஈடுபாட்டுடன் இல்லாமல் சமூகச் செயல்பாட்டாளனாகப் புறப்பட்டதை குறிக்கிறது ஒரு கதை. குறுநாவலாய் விரிந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுகிறது.
சமூக அழுக்கை மின்னல் ஒளிக்கீற்றாய் வெளிப்படுத்துகின்றன கதைகள். ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தில் நிலவும் அவலத்தை அம்பலப்படுத்துகிறது. சிறுகதையில் கனம் இருக்க வேண்டும் என எண்ணுவோர் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.
– முகிலை ராசபாண்டியன்