முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலின் வரலாற்றை புறநானுாற்றுப் பாடல்களைச் சான்றாக கொண்டு எழுதப்பட்ட நுால்.
கடையேழு வள்ளல்களுள் சிறந்தவனாகப் போற்றப்பட்டவன் பறம்பு மலை வள்ளல் பாரிவேள். இவன் ஆட்சி செய்த பிரான்மலை என்ற பறம்பு மலையின் வளம், வரிசையறிந்து பரிசு வழங்கும் வள்ளண்மை, கபிலர் பாரியின் நண்பராதல் போன்ற செய்திகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.
வேள்பாரியின் புகழைத் தாங்க முடியாத சினத்தால் மூவேந்தரும் அவரை குறிவைத்தனர். வஞ்சகத்தால் வீழ்த்த எண்ணிய போது, கபிலர் உயிர் நீத்த நிகழ்வு நெஞ்சை நெகிழ வைக்கிறது. பாரி மகளிருக்கு அவ்வை ஆறுதலாய் இருந்து மணமுடித்ததாக பதிவிடப்பட்டுள்ளது. பாரியின் பண்பு நலன்களை எடுத்துக் கூறும் நோக்கில் எழுதப்பட்ட நுால்.
– புலவர் சு.மதியழகன்