தமிழகத்தையும், மக்களையும், தமிழையும் மையப்படுத்தி படைக்கப்பட்ட நுால்.
திருவள்ளுவர் படைத்த திருக்குறள் வழியில் இந்தச் சமூகம் செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை முதல் கட்டுரையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தை வடக்காகவும், தெற்காகவும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு எதிர்க்குரலாக வெளிப்படுகிறது.
மொத்தம், 13 கட்டுரைகளை கொண்டுள்ளது. தமிழர்களின் முன்னேற்றத்தை முன்வைக்கிறது. தன்மானம், தன்னுரிமை எண்ணங்களை விதைத்து, இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக உள்ளது. தமிழ் மொழியில் மனம் போன போக்கில் பிறமொழிச் சொற்களை கலந்து பேசும் கலப்படக் காரர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது. தமிழ் நலம் பேணுவோர் விரும்பும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்