இரண்டாம் உலகப் போருக்கு பின், நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை பற்றிய நாவல். அந்த குழந்தை பிழைக்க ரெக்ஸ் என்ற நாய் உதவுகிறது. நிலநடுக்கத்தை முன்பே உணர்ந்து, குழந்தையை கவ்வி ஜன்னல் வழியே குதித்து காப்பாற்றுகிறது. அந்த குழந்தை வளர்ச்சியுடன் நீள்கிறது.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த குழந்தை, நாய் என்ன ஆனது என்பதை அறிய முடியாமல் தவிக்கும் தவிப்பு உள்ளத்தை நெருடுகிறது.
ரஷ்யாவில் மாஸ்கோ நகரின் பிரமாண்டத்தையும், அந்த காலத்திலே சுரங்கத்தில் ஓடிய மெட்ரோ ரயிலையும் கண் முன் காட்டுகிறது. தலைப்பிற்கு ஏற்ப இசையுடன் நகர்கிறது. ரஷ்யக் கலாசாரத்தையும், இசை மேன்மையையும் எடுத்துரைக்கும் நாவல்.
– முகிலை ராசபாண்டியன்